திண்டுக்கல் புனித அந்தோணியார் அறிவியல் பெண்கள் கலை கல்லூரி மற்றும் ராக்கிங் மைக்ரோ டெக்னாலஜி – திருச்சி


இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்தானது இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி. அருள் தேவி அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர். மேரி பிரமிளா சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார்.

மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். வைதேகி விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டதுடன்,கல்லூரி மாணவிகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறன்களை வெளி கொணர்வதற்காக மதர் அகஸ்டின் இங்க் பேசன் சென்டரினை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார்.

இந் நிகழ்வில் திரு. மாதவன் -இயக்குனர் ராக்கிங் மைக்ரோ டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் அவர்களும், முனைவர் அருள் ராயப்பன் இயக்குனர் டெக் பாப்புலஸ் திருச்சி அவர்களும் , திரு. தோமை பால்ராஜ் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாக உறுப்பினர் அவர்களும் ,சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வை கணினி துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here