திண்டுக்கல் தோமையார்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மு.பெரியசாமி தலைமையில் கட்சி கொடியேற்றும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் மாநகர செயலாளர் சு.அலெக்ஸ்

முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் திண்டுக்கல் மத்திய மாவட்ட தலைவர் இரா.அந்தோணி கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர பொருளாளர் ஆர். ஆரோக்கியசாமி, மாநகர துணைத் தலைவர்


வி.ரகுநாதன், தோமையார்புரம் பொறுப்பாளர் எ.மாதவன், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் திண்டுக்கல் மத்திய மாவட்ட துணைச் செயலாளர்
சு. செல்லபாண்டி நன்றி கூறினார்.
