
புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தாமரைப்பாடி பஞ்சாயத்தும் இணைந்து தாமரைப் பாடியில் உள்ள லிங்கன் குளம் மற்றும் சாலையூர் ஊரணி குளங்களை பராமரிப்பதற்கான துவக்க விழாவானது 24 1 23 அன்று நடைபெற்றது .

விழாவினை திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் பிரியங்கா ஐஏஎஸ் அவர்கள் குளங்கள் பராமரிப்பு பணியினை தொடங்கி வைத்தார் . விழாவினில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் விஜய சந்திரிகா மற்றும் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர் .

இந்நிகழ்வினை புனித அந்தோணியார் பெண்கள் கல்லூரியின் ஏரியா கவுன்சிலர் ஆன்ட்ரியா மைக்லீன் அமைப்புக்குழு ஒருங்கிணைத்தது இதில் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .

இன்று தேசிய வாக்காளர் தினம் நாளானது புனித அந்தோனியார் பெண்கள் கலை கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர் .

தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வினை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர் கவிதா அவர்களும் திருமதி ஆன்டனி ஜஸ்டினா மேரி அவர்களும் ஒருங்கிணைத்தனர்.
