ஆண்டோ ஸ்பார்க் 2023 கலை விழாவானது புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.2.23 நடைபெற்றது .விழாவிற்கு கல்லூரியின் செயலர் அருட்சகோதரி.அருள் தேவி தலைமை தாங்கினார்.


கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திரு. லாரன்ஸ் ஜெயக்குமார் திரைப்பட இயக்குனர், சென்னை மற்றும் திரு.சோனை சபரி திரைப்பட இயக்குனர், சென்னை அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளிடம் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் குறும்படம் எடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் நாளைய திரைப்பட இயக்குனராக உருவாவதற்கான வழிமுறைகளும் மாணவிகளிடம் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை சிறப்புரையாக வழங்கினர்.


இறுதியில் கலை விழாவிற்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவினில் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையினை வேதியியல் துறை மாணவிகளும்,தொடர் வெற்றிக் கோப்பையினை வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மாணவிகளும் பெற்றனர்.இவ்விழாவில் மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.


மேலும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகளில் புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாம் இடத்தினையும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தினையும் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தினையும் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் நீச்சல் போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தினையும் சிலம்பம் சுற்றுவதில் இரண்டாம் இடத்தினையும் புட்பால் போட்டியில் தொடர் கோப்பையினையும் பெற்று வெற்றி வாகை சூடினர்.