தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் MLA அவர்கள் சட்டமன்ற பேரவை விதியின் 55 ன் கீழ் கீழ்க்கண்ட அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த வேண்டுகோளில் கடந்த 22.2.2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.முத்துக்குமார் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 26.3.2023 அன்று சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த திரு.ஜெய் கணேஷ் என்ற வழக்கறிஞர் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்கறிஞர்கள் மீது நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் பதட்டம் குறித்தும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ளது போன்று தமிழ்நாட்டிலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டியதின் அவசியம் குறித்து விவாதிக்க வேண்டும் என பேரவை தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here