திண்டுக்கல் மாவட்டத்தில் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.அறிமுக விழா, மாஸ்டர் கிரேடு வழங்கும் விழா, சீருடை வழங்கும் விழா, முனைவர். ஆ. செபா மாஸ்டர் சில்வர் கிரேடு மாநில பொதுச் செயலாளர் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு தலைமை வகித்தார்.

டாக்டர் மா பெருமாள் முன்னாள் விமானப்படை வீரர் வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் சட்ட ஆலோசகர் முன்னிலை வகித்தார்.டாக்டர் கே பி எம் முகமது பாக்ஸ் தேசிய மனித வள உதவும் கரங்கள் நிறுவனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சி ஜான் போஸ்கோ ஊர் நிர்வாக பேரவை தலைவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

10 ம் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, மாஸ்டர்கள் விழாவில் கலந்துகொண்டு அவர்களது திறமைகளுக்கு தகுந்தவாறு மாஸ்டர் கிரேடு பெற்றுக்கொண்டனர்.கோல்ட் கிரேடு செல்வராஜூ ஆசான் கோவை, மற்றும் மருதாச்சலம் ஆசான் கோவை, சில்வர் கிரேடு ராஜ மனோகர் ஆசான் திருவள்ளூர், பிளாக் கிரேடு பெற்றவர்கள் சிவக்குமார் மாஸ்டர் கோவை, கண்ணதாசன் மாஸ்டர் கோவை, செந்தில்குமார் மாஸ்டர் கோவை, சரவணக்குமார் மாஸ்டர் கோவை, பழனிவேல் மாஸ்டர் திண்டுக்கல், மணிகண்டன் மாஸ்டர் சேலம், சோபியா மாஸ்டர் மதுரை, டார்க்புளு கிரேடு செல்வகுமார் என தங்களது திறமைகளுக்கு ஏற்ப மாஸ் கிரியைகளை பெற்றுக் கொண்டனர்.

மேலும் நமது உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக இரட்டை வழக்கறிஞர்களான அஜய் மற்றும் விவேக் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆசான்களும் மாசர்களும் பயிற்சியாளர்களும் மற்றும் நமது உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் பயிற்சியாளர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.