திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டமானது மாலை சுமார் 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. செல்வதன பாக்கியம் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.



பத்மாவதி மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தார். ரத்தினமாலா தலைவர், கே ஆர் கணேசன் மாவட்டத் தலைவர் சி ஐ டி யு, கே பிரபாகரன் மாவட்ட செயலாளர் சி ஐ டி யு மற்றும் முபாரக் அலி மாவட்ட தலைவர் டி என் ஜி இ எ ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழ்ச்செல்வி மாவட்ட பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டியும், பத்து வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டியும், விலைவாசி உயர்வு ஏற்றார் போல் காய்கறி உணவுப் பொருட்கள் செலவினங்களை ஏற்றுக்கொடுத்திட வேண்டியும், சில்லறை செலவீனம் 200 ரூபாயாக மாதந்தோறும் வழங்கிட வேண்டியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


