
ஜி டி என் கலைக் கல்லூரியில் 59 வது ஆண்டு விழா இன்று காலை 10 மணி அளவில் ஏபிஜே அப்துல் கலாம் கலையரங்கத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அழைக்கப்பட்டார்.

மேலும் பிரிட்பால் சிங் ஹேண்ட்பால் பெடரேஷன் ஆப் இந்தியா, ரோஸ் பாத்திமா மேரி டிஸ்ட்ரிக்ட் ஸ்போர்ட்ஸ் அண்ட் யூத் வெல்ஃபர் ஆபீசர், பாண்டியராஜன் கமாண்டண்ட் டி எஸ் பி 7 பெட்டாலியன், மற்றும் அலெக்ஸாண்டர் ஜேசுதாஸ் ப்ரொபஷனல் புட்பால் பிளேயர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

டாக்டர் ஆர். சக்கரவர்த்தி கல்லூரிதுணை முதல்வர் அனைவரையும் வரவேற்றார் .பின்பு அதைத் தொடர்ந்து பால குருசாமி கல்லூரிமுதல்வர் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக்கல்லூரியின் தாளாளர் திரு லயன்ஸ் ரத்தினம் அவர்கள் தலைமை உரையாற்றினர். அரங்கம் நிறைந்த மாணவர்களின் கூட்டத்தின் இடையில் விழாவின் கதாநாயகன் டாக்டர் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் அவர்களின் பேச்சு மாணவர்களின் கல்வி அவர்களது மேம்பாட்டு திறனையும் மையமாகக் கொண்டு அரங்கம் அதிரும் கைதட்டலோடு நிறைவு பெற்றது.

