திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சியினர் இன்று நீர் மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு தாகம் தீர்க்கும் சேவையை செய்தனர். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் பொதுமக்கள் பலரும் பயனடைந்தனர். இந்த நிகழ்வில் நடுவர் மாவட்ட தலைவர் ஜெய சுந்தர், செந்தில்குமார் தொகுதி தலைவர், சக்திவேல் தொகுதி செயலாளர், மாதவன் தொகுதி பொருளாளர், மகேஸ்வரர் தொகுதி செய்தி தொடர்பாளர் ஆகியோர்களும் மேலும் முக்கிய நிர்வாகிகளும் பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வானது காலை 9.30 மணி அளவில் துவங்கப்பட்டது. தாகம் தீர்த்த நாம் தமிழர் கட்சியினருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்