திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மூன்றாம் கட்டகாத்திருப்பு போராட்டமானது 25.4.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 4 மணி அளவில் துவங்கியது.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கியவர் ஆ.செல்வ தனபாக்கியம் மாவட்டத் தலைவர், முன்னிலை வகித்தவர் ச.பத்மாவதி மாவட்ட செயலாளர், மாநிலத் தலைவர் ரத்தினமாலா சிறப்புரையாற்றினார். முபாரக் அலி அரசு ஊழியர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் சிறப்புரையாற்றினார்.

மேலும் பல தோழர்கள் சிறப்புரையாற்றினர். திண்டுக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டமானது தொடரும் என அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
