திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரம் அய்யம்பாளையம் கிராமத்தில் தென்னையில் நோய் மற்றும் பூச்சி வேளாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சி.ராஜேஸ்வரி வேளாண்மை உதவி இயக்குனர் ஆத்தூர் வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அ.அனுசுயா தலைமை தாங்கினார்.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் முனைவர் வாணி மற்றும் காந்திகிராம பல்கலைக்கழக விஞ்ஞானி சாகிம்தாஜ் ஆகியோர் கலந்துகொண்டு தென்னை மரங்களை கோடைகாலங்களில் அதிகமாக தாக்கக்கூடிய சுருள் இ,வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் தென்னையில் மிருக வண்டு மேலாண்மை, சிவப்பு கூண் வண்டு மேலாண்மை, தென்னையில் வாடல் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இம்முகாமில் அலெக்சாண்டர் தோட்டக்கலை உதவி இயக்குனர், வெங்கடாசலம் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அய்யம்பாளையம் உதவி வேளாண்மை அலுவலர் சபரீஸ்வரன் நன்றி உரை வழங்கினார் இம் முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசன்னா மற்றும் உதவி செயல் தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் ஆகியோர்ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இம் முகாமில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தோட்ட கலைத்துறை மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.

அ.அனுசுயா