தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. உமாதேவி அவர்கள் தலைமையிலான சைபர்கிரைம் பிரிவு காவல்துறையினர் தொலைந்த போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு சுமார் 10,50,000 ரூபாய் மதிப்புள்ள 105 தொலைந்து போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து மீட்டனர்.

இன்று (26.04.2023) தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் தொலைந்து போன செல்போன்களின் உரிமையாளர்களை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன்களை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர்கள் தேனி மாவட்ட காவல்துறைக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு விரைந்து கண்டுபிடித்து மீட்ட தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினரின் பணி சிறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தொலைந்து போன செல்போனை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here