திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் சிறப்பாக, இந்த ஆண்டு முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

12 நாள் வகுப்புகள் , மே 2 தேதி முதல் நடைபெற உள்ளன. இந்த 12 நாள் வகுப்பிற்கு அரசு கட்டணம் ரூபாய் 1500 அதனுடன் சேர்ந்து ஜிஎஸ்டி18 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. எந்தவித வயது வரம்பின்றி, உயரம் 3 அடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பயிற்சியானது நடைபெறுகின்றது.

முறையாக பயிற்றுநர்கள் மூலம் பயிற்சியானது அளிக்கப்படுகின்றது. பயிற்சி நிறைவுற்றவுடன் அதற்கான சான்றுகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறும் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு நீச்சல் போட்டி தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியானது 12 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது . இதைத் தவிர மேலும் கூடைப்பந்து,தடகளம், கால்பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து விளையாட்டு பயிற்சிகளும் இலவசமாக கோடை பயிற்சிகளாக நடத்தப்பட உள்ளன மாவட்ட விளையாட்டு அதிகாரி ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்தார்.

மாவட்ட விளையாட்டு அதிகாரி
M .ரோஸ் பாத்திமா மேரி
