ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும் G. T. N கலைக் கல்லூரி, உடற்பயிற்சித் துறை இணைந்து நடத்தும் மாவட்ட ஹாக்கி தொடர் போட்டியானது GTN கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

இவ்விழாவிற்கு டாக்டர். துரை, GTN கலைக் கல்லூரி இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழக Rtn. ரமேஷ் பட்டேல் துணைத் தலைவர் தலைமை தாங்கினார்.

ஞானகுரு துணைத் தலைவர் வாழ்த்துரை வழங்கினர்.GTN கலைக் கல்லூரி ராமானுஜம், ஹாக்கி கழகச் செயலாளர் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார். டாக்டர். ராஜசேகர் உடற்கல்வி இயக்குனர் ஜி டி என் கல்லூரி இப்போட்டியை ஒருங்கிணைக்கிறார்.

இதில் 12 ஆண்கள் அணிகளும் , எட்டு பெண்கள் அணிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியானது இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது. முதல் போட்டியானது ஜி டி என் கல்லூரி மற்றும் லக்ஷ்மண சாமி நினைவு கிளப் இடையே நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற போட்டியில் பட்டேல் ஹாக்கி அகாடமி மற்றும் இந்திரா காந்தி ஹாக்கி கிளப் 2:1 என்ற கோள் கணக்கில் திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி வெற்றி பெற்றது. புஷ்கரம் நினைவு சுழற் கோப்பை வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும்.

