திண்டுக்கல் மாவட்ட முதல் பெண் மேயரான இளமதி ஜோதி பிரகாஷ் அவர்களிடம் ஆத்தூர் தொகுதி அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எஜுகேஷனல் அண்ட் சோசியல் டெவலப்மெண்ட் ரூரல் வுமன் வெல்ஃபேர் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் மூலமாக மாற்றுத் திறனாளிகள் இணைந்து மாற்றுத்திறனாளி 14 அம்ச கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்விடம் அமைத்து தரப்பட்டு மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பகவத்சிங் என்ற நபர் அரசியல் நெருக்கடி பிரகடனம் மற்றும் சேவை நோக்கம் இன்றி பொருளாதார ரீதியாக வணிக சிந்தனையோடு அந்த இடத்தை கைப்பற்ற நினைக்கிறார் என்றும் மாற்று திறனாளிகள் தொடர்ந்து அவர்களுக்குரிய ஓய்வு அறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவானது மேயரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
