திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் உசிலை சங்கிலி கலந்து கொண்டு அரசிற்கு எதிராக கள்ளர் பள்ளிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இணைக்க கூடாது என்று வலியுறுத்தியும்,ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும்,பெட்ரோல் டீசல் மீதான சேவை வரியை குறைக்க உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
