ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில் பட்டியில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான ஹாக்கி அணி தேர்வு 05.05.2023 அன்று ஜி டி என் கலை கல்லூரியில் நடைபெற்றது.

இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் இதற்கான பயிற்சி முகாம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட 18 ஹாக்கி விளையாட்டு வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு குழு உறுப்பினர்களான ஞானகுரு துணைதலைவர், விமல் ராஜ் உறுப்பினர், விக்டர் ராஜ் பொருளாளர் மற்றும் மகேஸ்வரன் துணைச் செயலாளர் ஆகியோர் ஹாக்கி அணி வீரர்களை தேர்வு செய்தனர். ஜி டி என் கலை கல்லூரியை சேர்ந்த சடையாண்டி, கோகுல், நெல்சன், கமலேஷ், திலக், கந்தசாமி, காமேஷ், செல்லப்பாண்டி, ஆர் என் எல் ஐ சேர்ந்த திலீப், மகேஷ் குமார், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மதன் ஹரிஷ் நவீன் குமார், கனிஷ் கிருஷ்ணன், சஞ்சய், ஸ்டீவ் லியோ ஆண்டனி, சந்தோஷ், நாகையம் கோட்டையை சேர்ந்த பரத் மற்றும் சுவாமி எம் எச் எஸ் சேர்ந்த விஜய் சுந்தர் ஆகிய 18 ஹாக்கி விளையாட்டு வீரர்கள் திண்டுக்கல் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏற்பாடுகளை தலைவர் நாட்டாமை காஜா மைதீன், துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல் மற்றும் செயலர் ராமானுஜம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர்.
