திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற ‘ஈடில்லா ஆட்சி இரண்டே ஆண்டு சாட்சி’ பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் சக்கரபாணி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் இ.ஆ.ப, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பா வேலுச்சாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட உதவி ஆட்சியர் பிரியங்கா இ. ஆ. ப. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திலகவதி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து தொப்பம்பட்டி மற்றும் பித்தளை பட்டி பகுதி நியாய விலை கடைகளுக்கு ‘கியூ ஆர்’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை துவங்கி வைத்தனர்.

செய்தி மக்கள் தொடர்புதுறையின் அதிநவீன வீடியோ காட்சி வாகனத்தை பார்வையிட்டனர். இதில் 2004 பயனாளிகளுக்கு ரூபாய் 7.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டன.

