திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் தளபதியார் மக்களின் முதல்வர் கட்சியின் தலைவர் மு .க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டமானது திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ. பெ செந்தில்குமார் தலைமை உரையாற்றினார்.

திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் இரண்டு ஆண்டு திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது.

ஜி டி என் சாலை பழுது பார்க்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கால்வாய் தூர் வாரும் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தெளிவு படுத்தினார்.

மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கழக உறுப்பினர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
