மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆனைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் உத்தரவின்படி இன்று 13.05.2023 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்,முதன்மை மாவட்ட நீதிபதி.திருமதி.A. முத்துசாரதா அவர்கள் தலைமையிலும், கூடுதல் மாவட்ட நீதிபதி, திரு. பி. சரவணன் அவர்கள், திரு. ஜி. சரண், கூடுதல் மாவட்ட நீதிபதி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம், திரு. ஜி. விஜயகுமார் அவர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி, திரு. வி. ஜான்மினோ அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி. ஜே. மோகனா, முதன்மை சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், திரு. எஸ். இராமச்சந்திரன், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி, முதன்மை உரிமையியல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, திரு. என். விஸ்வநாத், கூடுதல் உரிமையியல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பி. ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1, திருமதி.வி.பிரியா கூடுதல் மகளிர் நீதிமன்றம், திருமதி. சௌமியா மாத்யூ ஆகிய நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வழக்குகளை முடிவு காண, மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்ற வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் என மொத்தம் 2193 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் தரப்பினர்களுக்கு தீர்வு காணப்பட்ட மொத்த தொகை ரூ.4,07,85,675.
