திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாமின் நிறைவு நாளானது ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

கோடைகால பயிற்சியின் முகாமில் இறுதி நாளில் ஒற்றையர் கேரம் போட்டி நடத்தப்பட்டு முதல் நான்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதி நாள் போட்டிக்கு சுவாமிநாதன் திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் தலைமை தாங்கினார்.

மருதமுத்து பொருளாளர், பள்ளி முதல்வர் ஜெய்சி பெல் சலோம், செயற்குழு உறுப்பினர் ஜெஸ்பெர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். செயலர் ஆல்வின் செல்வகுமார் கோடை கால பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.

என் முகாமில் இறுதி நாளான இன்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் 18.5.2023 அன்று சிவகாசியில் கலந்து கொள்ள உள்ளனர்.
