கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல உரிமை சங்கம் நடத்திய கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தோழர் செல்லம்மாள் தலைமையில், தோழர் அழகு சிவகாமி, வேளாங்கண்ணி, கருப்பசாமி மற்றும் தேவி ஆகியோரின் முன்னிலையில் ஆர்ப்பாட்ட முழக்கம் ஆனது எழுப்பப்பட்டது.
நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வேண்டியும், பணித்தளங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய LCC, ICC அமைத்து செயல்படுத்த வேண்டியும், பூம்பாறை அருந்ததியர் மக்களுக்கு குடியிருக்க வீடுகளும் வீட்டுமனை பட்டா மற்றும் பெண்களுக்கு கழிவறை வசதி வேண்டும் என கோரியும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
மேலும் முனீஸ்வரி, நடராஜன், முத்து ராணி, திருமுருகன், பிரியா,அழகு ராணி, முருக லட்சுமி உட்பட பல உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
