திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரில் திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் சார்பாக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவினை நிறுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட களத்திற்கு திண்டுக்கல் மாவட்டபிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் சார்பாக திரு முருகேசன் மாவட்ட ஒக்கலிகர் கவுடா சமூகம், திரு சிவராமன் மாவட்ட கம்மவர் நாயுடு சமூகம், திரு இளங்கோவன் மாநில ஊராளி கவுண்டர் சமூகம், திரு கிருஷ்ணமூர்த்தி தமிழ் மாநில நாயுடு பேரவை, திரு வெங்கடேசன் மாவட்ட கம்மவர் நாயுடு சங்கம், திரு விடியல் விஜயகுமார் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், திரு சிவபாஸ்கர் தமிழ்நாடு ரெட்டியார் குலம் திரு சீனிவாசன் தமிழ் மாநில நாயுடு பேரவை திரு சுப்புராஜ் ஆல் இந்திய தெலுங்கு சம்மேளனம், திரு கோபிநாத் விஸ்வகர்மா சங்கம், திரு தண்டபாணி விஸ்வகர்மா சங்கம் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
