திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன், என் பி ஆர் மருத்துவக் கல்லூரி, பிரம்ம குமாரிகள் இணைந்து திண்டுக்கல் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் இருந்து உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.




இந்த விழிப்புணர்வு பேரணியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க தலைவர் டாக்டர் அமலா தேவி, செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தனர்.

டாக்டர் கிறிஸ்டோபர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கையில் புகையிலை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாகச் சென்றனர்.
