திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் சிலம்ப சாதனை நிகழ்வு,வாழ்த்துக்கள் தெரிவித்த நாட்டாண்மை காஜா மைதீன் …..
உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் சிலம்ப சாதனை நிகழ்வானது நடைபெற்றது. இந்த சிலம்ப நிகழ்வானது காலை 9:00 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 2:00 மணி வரை நடைபெற்றது.இந்த சிலம்ப சாதனை நிகழ்வில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த சிலம்ப சாதனை நிகழ்வானது திண்டுக்கல் SBM பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை லயன் டாக்டர் ஜெயராஜ் SBM பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் துவங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக லயன் டாக்டர் நாட்டாண்மை காஜா மைதீன் அவர்கள், லயன் டாக்டர் M. J. F திபூர்சியஸ்,இரட்டை வழக்கறிஞர்கள் அஜய் மற்றும் விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

உலகக் கலைகள் மற்றும் விளையாட்டுக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் லயன் டாக்டர் செபா மாஸ்டர் இந்த நிகழ்வுகளை நடத்தினார். இந்த சிலம்ப சாதனை நிகழ்விற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப ஆசான்கள் ,600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். பொதுமக்களும், மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் திரளாக வந்திருந்தனர். இந்த சிலம்ப சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் நிறைவை ஒட்டி திண்டுக்கல் லயன் டாக்டர் காஜா மைதீன் அவர்களை சந்தித்து அவரை கௌரவப்படுத்தும் வகையில் கேடயமானது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தமைக்காக நாட்டாண்மை காஜா மைதீன் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .மேலும் தமிழக அளவில் இந்த சிலம்ப சாதனை நிகழ்வை கொண்டு சென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
