திண்டுக்கல் மாவட்ட அரிமா லயன் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவானது லயன்ஸ் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக லயன் வழக்கறிஞர் குப்புசாமி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

செயலாளராக வழக்கறிஞர் மலை ராஜன் மற்றும் மனோகரன், பொருளாளராக கணேசன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகளை லயன் பாண்டியராஜன் பணியில் அமர்த்தினார்.

புதிய உறுப்பினர்களை செல்லப்பாண்டி முன்னாள் மாவட்ட ஆளுநர் சங்கத்தில் இணைத்து வைத்தார். சேவை திட்டங்களை ராமசுப்பு முன்னாள் மாவட்ட ஆளுநர் துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு வருகை தந்து லயன் டாக்டர் நாட்டாண்மை காஜாமைதீன், லயன் நல் நாகராஜன் மாவட்ட தலைவர் (வேலைவாய்ப்பு) வாழ்த்துரை தெரிவித்தனர்.
