திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவும், திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் உலக தாய்ப்பால் வார விழாவினை திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் சிறப்பித்தனர்.

தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் அவசியத்தை குறித்தும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தலைவர் மருத்துவர் அமலா தேவி, இந்திய மருத்துவ சங்கம் பெண்கள் பிரிவு, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் செயலர் மருத்துவர் செல்வராணி ஜெயராமன், கமலா நேரு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் உமாதேவி சிவக்குமார் மற்றும் மருத்துவர் ஹரிஹரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செவிலியர் படிப்பு மாணவிகள், மருத்துவமனை பெண் செவிலியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here