திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிரியல் நோய் மருத்துவ சங்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான ஆரோக்கியம் இருபாலருக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ் எம் பி எம் மெட்ரிகுலேஷன் பள்ளி, அனுகிரஹா பள்ளி, எஸ் பி சி அகாடமி மற்றும் தக்ஷஷீலா வித்யா மந்திர் ஆகிய பள்ளிகளில் நடத்தப்பட்டது.

6ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் இதில் கலந்துகொண்டனர். மருத்துவர் ஜெ அமலா தேவி மகப்பேறு பிரிவு தலைவர், திண்டுக்கல் (கிளை), படக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சங்க செயலர் மருத்துவர் செல்வராணி சுகாதாரம் பற்றிய கருத்துக்களை தெளிவாக விளக்கினார். இந்நிகழ்வில் இளம் இந்திய கூட்டமைப்பின் துணைத்தலைவர் மருத்துவர் பிரதீஷ் சந்திரன் மற்றும் தளிர் பிரிவின் தலைவர் சப்தகிரி மற்றும் துணைத் தலைவர் நிரஞ்சனா பிரசாத் ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்து நிகழ்வுகளில்
கலந்து கொண்டனர்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
