சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் MLA
திரு.A.வெங்கடேசன் அவர்கள் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த சலவை தொழிலாளர்களுக்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும் என்று சலவை தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடமும் அவர்களின் தலைவரிடமும் உறுதி கூறினார். மேலும் 15 வது வார்டு 16வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார் .

அதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டுமாய் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார் .அவருடன் 15 வது வார்டு உறுப்பினர் திரு.குருசாமி அவர்களும் மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் திரு.செல்வராணி ஜெயராம் அவர்களும் மற்றும் ஒன்றிய கழக, பேரூர் கழக, மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிர் அணி அமைப்பாளர், அவர்களும்
கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here