சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் மற்றும் முள்ளி பள்ளம் என்ற இடத்தில் இந்தியாவின் 11 வது ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியானது அனுசரிக்கப்பட்டது.

மேலும் அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் மன்ற தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னிலை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி பூங்கொடி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல்,துணைத்தலைவர் எம் கேபிள் ராஜா, VAO பிரபாகரன், சமூக ஆர்வலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்றம் முக்கிய நிர்வாகிகள் பாண்டி, பாலகுரு, முல்லை தவம், ரவிச்சந்திரன், ஆறுமுகம், விக்கி மற்றும் உறுப்பினர்கள் விஜயன், சூர்யா, மலையரசன் ஆகியோரோடு ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
