புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு தினம் 11.08.2023 அன்று கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வினை கல்லூரியின் செயலர் அருட்சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் தொடங்கி வைத்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வடமதுரை துணை காவல் ஆய்வாளர் திருமதி தமிழரசி அவர்கள் வருகை புரிந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை மாணவிகளிடம் சிறப்புரையாகவழங்கினார்.
மேலும் போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பற்றிய அரிய தகவல்களையும் சிறப்புரையாக மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு போதை தடுப்பு விழிப்புணர்வுக்கான உறுதி மொழியினை ஏற்றனர்.
