திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவானது தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அபிராமி அரிமா சங்கத்தின் தலைவராக முஜிபுர் ரஹ்மான், செயலாளராக செந்தில்குமார் மற்றும் பொருளாளராக பாபு சேட் ஆகியோர் லயன் பாண்டியராஜன் அவர்களால் பணியில் அமர்த்தப்பட்டனர்.

எம் ஜே எஃப் லயன் பாரி பரமேஸ்வரன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். 100 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு தேவையான இருக்கைகள் மற்றும் சாப்பாடு மேஜைகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.

சேவை திட்டங்களை காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் எம் ஜே எஃப் லயன் திபூர்ஷியஸ், லயன் ரத்தினம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் லயன் நாட்டாண்மை காஜாமைதீன் மற்றும் அபிராமி லயன்ஸ் சங்க புரவலர் கருணாகரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

மண்டல தலைவர் ராஜா மற்றும் வட்டாரத் தலைவர் லயன் டாக்டர் அமலா தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
