திண்டுக்கல் மாவட்டம் திருவருட் பேரவையின் சிறப்புக் கூட்டமானது, சமய நல்லிணத்தை எதிரொலிக்கும் வகையில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவருட் பேரவையின் கௌரவத் தலைவர் எஸ். கே .சி. குப்புசாமி மற்றும் தலைவர் டாக்டர் ரத்தினம் தலைமை வகித்தனர்.

செயலாளர் மரிவளன் மற்றும் பொருளாளர் நாட்டாண்மை என். எம் .பி .காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சமூகத்தை மேம்படுத்தும் சமய நல்லிணக்கம் பற்றிய சிறப்புரையை தமிழறிஞர் மற்றும் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிகழ்ச்சியை இணைச் செயலர் திபூர்சியஸ் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் நடத்திச் சென்றார்.

மேலும் திருவருட் பேரவையின் கூட்டத்திற்கு மரு.அமலா தேவி, ஆதவன் ஃபுட்ஸ் உரிமையாளர் மெர்சி செந்தில்குமார், லயன் பாபிமாலா, திருநங்கை குணவதி மற்றும் மும்மதத்தையும் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
