ஊட்டச்சத்து வார விழா திண்டுக்கல் பாரன்டிங் கிளப் மற்றும் வாஹா பாரம்பரிய உணவு இணைந்து நடத்திய “உணவே அமிர்தம்” ஆரோக்கிய உணவு போட்டியானது திண்டுக்கல் ரமோரா எலைட் கிராண்ட்டில் நடைபெற்றது.

செப்டம்பர் 1 முதல் 7 வரை உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு இப்போட்டியானது நடத்தப்பட்டது. வாகா நிறுவனர் விஜயலட்சுமி சிவக்குமார் மற்றும் திண்டுக்கல் பேரண்டிங் கிளப் தலைவர் மோனிஷாமனோஜ் குமார், ஸ்ரீ வைஷ்ணவி துணைத்தலைவர், நிகிதா செயலாளர், மரு.பிரியதர்ஷினி மற்றும் வீணா ஆனந்த் பவுண்டர் டிரஸ்ட்டி ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை சிறுதானிய உணவு முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டியை நடத்தினர்.

இதில் சுமார் 40 பெண்கள் போட்டியாளர்களாக பங்கேற்று வித்தியாசமான முறையில் வாகா சிறுதானிய சத்துமாவை பயன்படுத்தி பலவிதமான உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினர். முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
