திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி மற்றும் பட்டேல் ஹாக்கி அகாடமி இணைந்து வள்ளிநாயகி நினைவு சுழற்கோப்பைக்காண மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியை நடத்தியது.

இதில் மாநிலத்தில் உள்ள 9 க்கும் மேற்பட்ட மாநில அளவில் உள்ள சிறந்த அணிகள் கலந்து கொண்டது.இதற்கு என்.எம்.பி. காஜாமைதீன் தலைமை தாங்கினார்.முதல் போட்டியை ஜி.டி.என் கல்லூரி இயக்குனர் துரை ரத்தினம் துவக்கி வைத்தார்.

இறுதிப் போட்டியை முன்னாள் கால்பந்து வீரர் ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார்.இறுதிப் போட்டியில் மதுரை சுகர் மில் பள்ளி மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியும் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் 2;0என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.இதில் மாவட்ட குத்து சண்டை சங்கத் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸிபாத்திமா மேரி ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு சுழற் கோப்பையை வழங்கினர்.திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வீரர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.இதில் மாவட்ட கால்பந்து சங்க உதவி செயலாளர் ஈசாக்,மாவட்ட கேரம் சங்க செயலாளர் செல்வகுமார்,தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் சங்க துணை தலைவர் பிரேம்நாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மாவட்ட ஹாக்கி சங்க பொருளாளர் விக்டர் ராஜ்,ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக ஜி டி என் கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் ராஜசேகர் நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை பட்டேல் ஹாக்கி அகடாமி செயலாளர் ஞானகுரு,மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் ராமானுஜம் ஆகியோர் செய்து இருந்தனர்.
