திண்டுக்கல் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் வீரமங்கைகள் நலச் சங்கத்தின் சிறப்பு பொது குழு கூட்டமானது சங்க அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தலைவர் செபஸ்தியான் தலைமையில், செயலாளர் ராஜு, பொருளாளர் குணசேகரன், சட்ட ஆலோசகர் அஜய் ( இரட்டை வழக்கறிஞர்கள்) அவர்கள் முன்னிலையில் சங்க கூட்டமானது நடைபெற்றது.

இதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லியில் சந்தர்மந்தரில் நடந்த போராட்டத்தில்( ஒரே தகுதியில் ஓய்வூதியம் ) கலந்து கொண்டது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கலந்து கொண்டு டிபன்ஸ் சேலரி பேக்கேஜ்-ன் பலன்கள் மற்றும் கடன் வசதிகள் பற்றி விளக்கினர்.

மேலும், இசிஎச்ஸ் பற்றி விவாதித்து சங்க உறுப்பினர்கள் இனி மருத்துவமனைக்கு போனால் பணம் கட்டக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் அக்டோபர் மாதம்16 ம் தேதி நடைபெறவிருக்கும் சிடிஎ கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
