திண்டுக்கல் லயன்ஸ் சங்கம் மற்றும் திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாமானது திண்டுக்கல் லயன்ஸ் மீட்டிங் காலில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு திண்டுக்கல் லயன் சங்க தலைவர் வழக்கறிஞர் டாக்டர் குப்புசாமி மற்றும் விஐபி டெய்லர் உரிமையாளர் காளிதாஸ் தலைமை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மண்டல சேர்மன் கார்த்திக் முகாமை துவக்கி வைத்தார். ஸ்ரீதர் மற்றும் திவ்யா ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.


திருவருட் பேரவை பொருளாளர் சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜா மைதீன், அரிமா மாவட்டம் முதல் துணை ஆளுநர் சசிகுமார் வழக்கறிஞர் ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்புரை, சர்க்கரை நோய் உள்ளவர்களின் கண் விழித்திரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகள் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களை கண்டறிந்து சிகிச்சை பெற்றனர்.

