திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் லியோ சங்க பதவியேற்பு விழாவானது பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆளுநர் எம் ஜே எப் லயன் ராதாகிருஷ்ணன் பதவியேற்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் திபூர்ஷியஸ், மண்டல தலைவர் ராஜா, வட்டாரத் தலைவர் அமலா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

செயலாளர் பாபி மாலா மற்றும் மரு.செல்வராணி, பொருளாளர் சேவியர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வரவேற்புரை ஆற்றினர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு சிறப்புரையைவழங்கினார். குறிப்பாக தீபாவளி நெருங்கும் இச்சமயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

புதிய லியோ சங்க உறுப்பினர்களும், மூன்று பொறுப்பாளர்களும் பதவி ஏற்றுகொண்டனர். ரூபாய் ஐந்தாயிரம் பணமானது காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக லியோ சங்க பொருளாளரிடம் வழங்கப்பட்டது. நிறைவாக லியோ சங்கத் தலைவர் ஜான்சி நன்றியுரை ஆற்றினார்.
