திண்டுக்கல் மாவட்டம் அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்க கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்லூரியின் செயலர் அருட்சகோதரி அருள் மேரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மேரி பிரமிளா சாந்தி மற்றும் துணை முதல்வர் ஜஸ்டினா முன்னிலை வகித்தனர்.
மதுரை சதன் ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி என் எஸ் எஸ் அட்வைசர் டாக்டர் மனோகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவினை சிறப்பாக கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சர்லின் ஒருங்கிணைத்திருந்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்று கொண்டனர்.
மேலும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நாளில் நினைவாக 40 தென்னை மரக் கன்றுகளை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் நட்டுவைத்தனர்.
