தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூடுதலாக இணைந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் பணியை சென்னையில் இன்றுதொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மொ. நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.

இவ்விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு .சா. காந்தி ராஜன், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் , திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அ. இராஜா, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சு. பழனியம்மாள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன், மாவட்ட வழங்கள் அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சித்ரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திகா, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் வில்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.மேலும் இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3.95 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளதாக தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here