திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கையர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் ஈ சி ஹெச் எஸ் மருத்துவமனை எதிரில் நடைபெற்றது. தமிழக முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தினர்.

மாவட்டத் தலைவர் செபாஸ்தியன் தலைமை உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராஜு முன்னிலை வகித்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் அஜய் வரவேற்புரையாற்றினார். சங்க செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி நன்றியுரையாற்றினார்.

மேலும் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ரசிக்குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜந்தர் மந்திரில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் குறைகளை நீக்க கோரி 279 நாட்களாக நடைபெற்று வரும் இயக்கத்திற்கும், புதுடெல்லியில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவி இயக்குனர் மற்றும் நல அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி நியமிக்க கோரியும், ஜிஎஸ்டி கேட்டில் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சம அளவில் பொருட்கள் வாங்க நிர்ணயிக்க கோரியும், இ சி ஹெச் எஸ் பங்களிப்பு தொகையை முன்னாள் ராணுவ வீரர்களே தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்ய அனுமதிக்க கோரியும், ஆங்கிலேயர் கால சட்டங்களை போல் முன்னாள் ராணுவ வீரர்கள் மீது இன்றும் அமுல்படுத்த வேண்டாம் என கோரியும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீர மற்றும் வீராங்கனைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here