புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்: 27 மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வனத்துறை இணைந்து நடத்தும் ஏழு நாட்கள் நாட்டு நலப்படுத்திட்ட சிறப்பு முகாம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜாக்கப்பட்டி ஊராட்சியில் துவங்கியது.

இவ்விழாவில் புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் அருட்சகோதரி அருள்தேவி முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். துணை முதல்வர் பேராசிரியை அந்தோனி ஜஸ்டினா மேரி வாழ்த்துரை வழங்கினார்.

இணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு முனைவர். பா. மூர்த்தி துவக்க உரை வழங்கி சிறப்பித்தார். பாண்டி மரக்கன்றுகள் நடுவதற்கு உதவினார். திரைப்பட இயக்குனர் முனைவர் சோனை புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முழு சுகாதார இயக்கம் (ஊரகம்), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , எழுத்தாளர் இராமநிதி ” தூய்மை- அகமும் புறமும்” என்ற தலைப்பின் கீழ் சிந்தனையுரை வழங்கி சிறப்பித்தார். பாலாஜி ரெங்க ராமானுஜம் கிராம கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வை வழங்கினார்.

ஏ பி சி பவுண்டெஷன் பா. மா. ஶ்ரீ செண்ணியப்பன் வெற்றிப் பயணத்தில் “கோதவாடிக் குளம்” என்னும் தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார். இவர்களுடன் இணைந்து புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஆலோசகர் மனோகரன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுகன்யா விண்ணரசி மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் இவ்விழாவை சிறப்புடன் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here