திண்டுக்கல் டிசம்பர், 19

திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியில் குத்துச்சண்டை வீரர்கள் ஆண்கள் தினேஷ்,போஸ்வின், காவியன்,வருன்,ஹரிஹரன் ஆகிய 5 வீரர்களும் பெண்கள் ஞான சுவாதி, ஆசா, ஹென்னா ஜாய், காவியா,ஜெனிஃபர், தீபா, ஸ்டிகா ஜாஸ்மின் ஆகிய 7 வீரராங்கணைகளும் மதுரை காமராசர் பல்கலைக்கழக குத்துச்சண்டை அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் பஞ்சாப் மாநிலம் மகாலியில் டிசம்பர் 22 முதல் 29 வரை நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்களை வழி அனுப்பி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.இதில் கல்லூரியின் இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம், முதல்வர் முனைவர் பாலகுருசாமி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர், அரசன் குழுமம் நிறுவனர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, தேசிய ஹாக்கி வீரர் ஞானகுரு, கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here