கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காணியாளம்பட்டியில் சங்கர் என்னும் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தை செய்து வருகின்றன.

இந்த மறியல் போராட்டம் ஆனது காலை 11.00மணி முதல் 12.40 வரை நடைபெற்று வருகிறது.

மேலும் இப்போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பேச்சுவார்த்தையின் போது ஜனவரி 15 தேதிக்குள் வெறிநாய்களை பிடித்து கொள்கின்றோம் எனக் கூறியதால் பேச்சுவார்த்தை நம்பிக்கை அடிப்படையில் இப்போராட்டம் ஆனது கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here