திண்டுக்கல் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மணி கூண்டு அருகே ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் தீவிர பேரிடர் ஆக அறிவிப்பு செய்ய கூறியும், 21,000 ஆயிரம் கோடி நிவாரண நிதிகோரியும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் EVM முறையை கைவிட்டு மீண்டும் வாக்கு சீட்டு முறை நடைமுறைப்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்டம் மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமையில் நடைபெற்றது.

அதில் கட்சியின் பொதுச்செயலாளர் வில்லவன் கோதை, மண்டல துணை செயலாளர் ஜலால் முகமது, மாநில துணை செயலாளர் நில உரிமை மீட்பு இயக்கம் உலக நம்பி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் திருச்சித்தன், மண்டல துணைச் செயலாளர் அன்பரசு, செய்தி தொடர்பாளர் ஸ்வீட் ராஜா தொகுதி செயலாளர் பெர்னா, தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் சந்திரன், பால்ராஜ் பாபு பாலையா, ஆல்வின் காலின்ஸ், மகளிர் அணி செயலாளர் சவரியம்மாள், நகர பொறுப்பாளர் திவ்யா, தொழிலாளர் விடுதலை முன்னணி தொகுதி செயலாளர் ஹைதர் அலி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here