திண்டுக்கல் டிசம்பர் 8

திண்டுக்கல் மாவட்ட அளவில் கால்பந்து, சிலம்பம், தடகளம், குத்துச்சண்டை,கேரம், ஆகிய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இலவச பயிற்சி முகாமானது என் ஜி ஓ காலனி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

இந்த துவக்க விழாவிற்கு ஜான்சன் ஆரோக்கியசாமி, செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனர் தலைமை தாங்கினார். கண்ணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முன்னிலை வகித்தார்.

இந்திய தடகள பயிற்சியாளர், மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன், முன்னாள் கால்பந்து வீரர், கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், ஞானகுரு பட்டேல் ஹாக்கி அகாடமி, மோகன் சிலம்பு பயிற்சியாளர், விக்டர் ராஜ் பயிற்சியாளர் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சந்திரன் மாவட்ட தடகள பயிற்சியாளர் நன்றியுரை வழங்கினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here