புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 13.01.2024 பொங்கல் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்கள் தலைமை வகித்தார்.

கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்கள் விழாவில் முன்னிலை வகித்தார்.

வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு வழி விடுவோம் எனும் தலைப்பினை ஒட்டிய இப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திருமிகு. குழந்தை ராஜ் அவர்களும் ,எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு. முனைவர் மணி அற்புதராஜ் அவர்களும் இவ்விழாவினில் கலந்து கொண்டதுடன் உழவர் நன்னாளில் அனைவரும் ஒன்று கூடி தேச ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாக இனிய பொங்கலிட்டு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உற்றார் உறவினருடன் கூடி தங்கள் அன்பினை பரிமாறிக் கொள்ளுதல் மிகச் சிறந்த தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டினை வளர்க்கும் செயல்முறைகள் ஆகும் என்பது போன்ற கருத்துக்களை சிறப்புரையாக வழங்கியதுடன் இப்பொங்கல் விழாவில் ஒவ்வொரு துறைவாரியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

இப்பொங்கல் விழாவில் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் மாணவிகளால் நிகழ்த்தப்பட்டு விழாவானது இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் சுமார் 1200 மாணவிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here