ராமநாதபுரம் மாவட்டம், பிப்ரவரி 10,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அடிக்கல் நாட்டு விழாவனது நடைபெற்றது.

இதில்சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் ராமநாதபுரம் திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. செய்யது அல்லா பிச்சை மற்றும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்ஹாஜ் எம். எஸ்.லுத்துபுல்லாஹ் ஆலிம் பி.காம், தலைவர் வடக்கு தெரு ஐக்கிய ஜமாத் வேதாளை அனைத்து ஜமாத்தார்களும் அனைவரும் கலந்து கொண்டனர்.

மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் குஞ்சார் வலசை முன்னாள் ஊர் தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் வடக்குத்தெரு சீனி அப்துல் காதர் அவரது மனைவி ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர் எஸ் ரூபைதா பேகம் மற்றும் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர். அர்ஜுன் குமார் துணை இயக்குனர் சுகாதார பணிகள் மற்றும் டாக்டர் சுரேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் அனு சௌபா மருத்துவ அலுவலர், மகேந்திரன் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் சுகாதார ஆய்வாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here