பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி ஆடிட்டோரியம் திறப்பு விழா பிரம்மா குமாரிகளின் மதுரை துணை மண்டலத்தின் சார்பாக திண்டுக்கல் to நத்தம் ரோட்டில் ,மேட்டுக்கடை அருகில் உள்ள அஞ்சுகுளி பட்டியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சக்தி சரோவர் தபோவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள , ஓம் சாந்தி ஆடிட்டோரியத்தின் திறப்பு விழா வருகின்ற 8 .1 .2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் சிறப்பாக நடைபெற உள்ளது.


இதன் சிறப்பம்சம் :
ஓம் சாந்தி ஆடிட்டேரியத்தில் ஒரே நேரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் ஒன்றாக
அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்.
மக்கள் அனைவருக்கும் மன அமைதியை அளிக்கும் சுய ஆளுமை பயிற்சி வகுப்புகள், மன இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடிட்டோரியத்தின் திறப்பு விழாவிற்காக பிரம்மா குமாரிகள் தலைமையகம் மவுண்ட் அபு விலிருந்து மூத்த ராஜயோகிகள் கலந்து கொண்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்.
வருகின்ற 8.1.23 தியான மண்டபம் திறப்பதை ஒட்டி இன்று ஜெகதாம்பா சரஸ்வதி பவன்3, எல்.ஜி.பி காம்பவுண்ட், வாழ்க வளமுடன் தெருவில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பித்த விருந்தினர்கள்
ராஜயோகி பிரம்மா குமார் ஜெயக்குமார் M. SC. YOGA மற்றும் ராஜ யோகினி பிரம்மா குமாரி செல்வி மதுரை துணை மண்டலம்.
