
இன்று அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் பூதிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைதி அறக்கட்டளையின்
மேலாளர் ஆ. சீனிவாசன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. பவித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் பள்ளி தலைமை ,ஆசிரியர் சாந்தி, ஆசிரியர் ஜோசப் ஆல்பர்ட் ,கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் ஊராட்சி செயலாளர் கி ராமசாமி ,அங்கன்வாடி பணியாளர் ரதிதேவி ,துணைத் தலைவர் காளியம்மாள் சத்துணவு அமைப்பாளர் சரோஜாதேவி ,வார்டு மெம்பர் சாந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை சசிகலா ,திவ்யா, மணிமேகலை, ஜெயப்பிரியா, நாகலட்சுமி ,சுகன்யா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.


இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசின் மூலம் கிடைக்கப்பெறும் திட்டங்கள் பற்றியும், கூட்டத்திற்கு வருகை புரிந்த அரசு அலுவலர்கள் பஞ்சாயத்து அளவினால மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் பற்றியும் விளக்கி கூறினார்கள். கலந்துரையாடல் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது. தன்னார்வலர்கள் மகேஸ்வரி வள்ளியம்மாள் ஆகியோர் நன்றியுரை கூறினார்கள்.
